
போருக்கான ஏற்பாடுகள் உக்கிரமடைந்து வருகின்றன… நடிகர்சங்க தேர்தலைத்தான் சொல்கிறோம்.. சரத்குமார் அணியினர், விஷாலின் பாண்டவர் அணி மீது தினசரி ஒரு குற்றச்சாட்டை கூறிவருகின்றனர். ஆனால் விஷால் அணியினர் திருப்பி அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறாமல், தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள்..
தனது ஆதரவு பாண்டவர் அணிக்குத்தான் என உலகநாயகன் கமல் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தங்களது பலத்தை நிரூபிக்கும் விதமாக தங்களுக்கு ஆதரவு தரும் உறுப்பினர்கள் கூட்டத்தை நேற்று ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்தியது பாண்டவர் அணி.. அதுமட்டுமல்ல, நடிகர்சங்க பதவிகளுக்கு போட்டியிடும் உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தினார்கள்..
அத்துடன் தங்களது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். தேர்தல் அறிக்கையை சிவக்குமார் வெளியிட நடிகை சச்சு பெற்றுக்கொண்டார். விஷால் பேசும்போது, “நாங்கள் முறைகேடு நடந்ததாக குறிப்பிடும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தகுந்த ஆதாரம் வைத்திருக்கிறோம். இனி அவர்கள் கூறும் குற்றச்சாட்டு எதற்கும் பதிலளிக்க போவதில்லை. வரும் தேர்தலில் எங்களின் வெற்றி அதற்கு பதில் சொல்லும்” என கூறினார்.
Comments are closed.