ஜாக்கிசானுடன் மிஸ்ஸான வாய்ப்பு ; நீது சந்திரா ரசிகர்கள் ஏமாற்றம்..!

194

ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசானுடன் நடிக்கும் வாய்ப்பு நமது இந்திய கதாநாயகிகளில் மல்லிகா ஷெராவத்துக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக தற்போது ஜாக்கிசான் நடிக்கவுள்ள ‘குங்க்பூ யோகா’ படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் பாலிவுட் நடிகையான காத்ரீனா கைப்புக்கு கிடைத்துள்ளது. இதில் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனையாக நடிக்கிறாராம் காத்ரீனா.

ஆனால் உண்மையிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனையான நீது சந்திரவுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கவேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் நீது சந்திராவோ இந்த விவாதங்களை பார்த்து சிரித்தவாறே, ‘காத்ரீனா கைப்’ இதற்கு தகுதியானவர் தான். ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோருடன் மிகச்சிறந்த படங்களை தந்துள்ளார்” என பெருந்தன்மையுடன் கூறியுள்ளார் நீதுசந்திரா.

Comments are closed.