பாபநாசம் யூனிட்டை பார்த்து பொறாமைப்பட்ட ஸ்ரீப்ரியா..!

231

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் ஏற்கனவே கன்னடத்திலும் தெலுங்கிலும் ரீமேக்காகி  மூன்று மொழிகளிலும் வெற்றியை சுவைத்து விட்டு தமிழில் பாபனாசமாக உருமாறி இங்கே என்ன பரிசு தருவீர்கள் என ஆவலுடன் தயாராக காத்திருக்கிறது.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஸ்ரீப்ரியாதான் இதன் தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார். அவருக்கு என்ன வருத்தம் என்றால் அவர் தெலுங்கில் இந்தப்படத்திற்காக 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாராம்.

ஆனால் தமிழில் ஒருநாள் முன்னதாகவே அதாவது 39 நாட்களிலேயே இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் கமலும் சேர்ந்து முடித்துவிட்டார்கள் என்பதில் அவருக்கு சற்றே பொறாமையாம். இதை அவரே ‘பாபநாசம்’ படத்திற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, ஷூட்டிங் நடந்த 39 நாட்களில் ஒருநாள் கூட படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு ஸ்ரீப்ரியா போகவே இல்லையாம்.

Comments are closed.