ஞானப்பழமாக ஜொலிக்கும் ‘கான்’ சிம்பு..!

245

 

படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.. முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்ததும் தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘கான்’ படத்தின் படப்பிட்ப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த அதிரடியாக நேற்று ‘கான்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார்கள்.

இந்தப்படத்தில் முருக பக்தராக நடிக்கிறார் சிம்பு. அதன் அடையாளமாகவே பர்ஸ்ட் லுக்கில் நெற்றியில் திருநீறு பட்டையெல்லாம் அடித்து ஞானப்பழமாக காட்சி தருகிறார் சிம்பு. டாப்ஸி கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Comments are closed.