ரஜினி படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசனுக்கு ஒரு இடம்..!

233

 

பெரிய ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்களில் எப்போதாவது சில சமயங்களில் ஒரு புதுமுக நடிகர் அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் புகழ் வெளிச்சத்துக்குள் வருவது தமிழ்சினிமாவில் அவ்வப்போது நடப்பதுதான். அப்படி தற்போது அனைவராலும் கவனிக்கப்படும் நபராக மாறியிருப்பவர் தான் ‘மெட்ராஸ்’படத்தில் கார்த்தியின் நண்பனாக நடித்த கலையரசன்.

தற்போது இவர் பிரபல எழுத்தாளரான அஜயன் பாலா இயக்கும் ‘மைலாஞ்சி’ என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாக உடனடி புரமோஷன் ஆகியிருக்கிறார். இதையெல்லாம் விட மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம் சூப்பர்ஸ்டாரை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் கலையரசனுக்கும் ஒரு முக்கிய ரோல் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்ல, அட்டகத்தி தினேஷுக்கும் ஒரு நல்ல கேரக்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

Comments are closed.