மீண்டும் வில்லன் ஆனார் பாண்டியராஜன்..!

247

 

கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் நாம் பார்த்த பாண்டியராஜனை ‘அஞ்சாதே’ படம் மூலம் வில்லனாக மாற்றிக்காட்டினார் டைரக்டர் மிஷ்கின். அவரது வில்லன் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தாலும், அதன்பின் வில்லன் நடிப்பை அவர் தொடரவே இல்லை. இப்போது மீண்டும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.

பி.வாசுவிடம் உதவி இயக்குனராக இருந்த மூர்த்திகண்ணன் என்பவர் இயக்கும் ‘சாலையோரம்’ என்கிற படத்தில் தான் வில்லனாக நடிக்கிறார் பாண்டியராஜன். புதுமுகங்களான ராஜ், செரீனா ஜோடியாக நடிக்கிறார்கள். சிங்கப்பூரை சேர்ந்த எஸ்.சேதுராம் என்பவர் படத்திற்கு இசையமைக்கிறார். பிறக்கும்போதே எல்லா வசதிகளும் கிடைத்த ஒரு பெண், தனக்கு கிடைக்காத ஒன்றை காதலிக்கிறாள்.. அது அவளுக்கு கிடைத்ததா என்பதுதான் படத்தின் கதையாம்.

Comments are closed.