பிரசாந்த் படத்தை இயக்கும் ‘டிடி’யின் கணவர்..?

112

 

கடந்த 2௦13ல் பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான படம் தான் ‘ஸ்பெஷல் 26’. போலி சி.பி.ஐ ஆபிசரான அக்சய் குமாரின் தலைமையில் இயங்கும் கும்பல் ஒன்று ரெய்டு என்கிற பெயரில் கோடீஸ்வரர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணத்தை கொள்ளையடிப்பதுதான் படத்தின் கதை. பாலிவுட்டில் பயங்கரமாக கல்லா கட்டிய இந்தப்படத்தை இவ்வளவு நாட்களாக தமிழில் ரீமேக் செய்யாமல் இருந்ததே ஆச்சர்யம் தான்.

ஆனால் நடிகர் தியாகராஜன் இதில் முந்திக்கொண்டுவிட்டார். சாகசம் படத்தை தொடர்ந்து தனது மகன் பிரசாந்த்தை வைத்து இந்தப்படத்தை தயாரிக்கிறார். படத்தை இயக்குவது விஜய் டிவி தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினியின் கணவர் ஸ்ரீகாந்த் தானாம். ஸ்ரீகாந்த், கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தியாகராஜன் இந்த தகவலை பகிரங்கமாக உறுதிப்படுத்தாவிட்டாலும், படத்திற்கு இசையமைக்கும் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட போட்டோ ஒன்றின் மூலம் க்ளூ கொடுத்திருக்கிறார். “எனது மிக நெருங்கிய ஒருவரின் தமிழ்ப்படத்திற்கான இசைக்கோர்ப்பு பணிகளில் இருக்கிறேன்” என தானும் ஸ்ரீகாந்தும் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார் தமன். அனேகமாக இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Comments are closed.