கமலின் அண்ணனாக மட்டுமின்றி மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டவர் நடிகர் சாருஹாசன். தற்போது இவர் தனது கடந்த கால வாழ்க்கை அனுபவங்கலை தொகுத்து எழுதியுள்ள ’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தகத்தை எழுத்தியுள்ளார். இதன் அறிமுக விழா சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்வில் பல வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்ட சாருஹாசன், அவர்களின் கேள்விகளுக்கும் சுவைபட பதிலளித்தார். குறிப்பாக வக்கீல் தொழில் செய்தபோது நடந்த சுவையான சம்பவங்களையும் சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் விளக்கிப் பேசினார். அவருடன் அவரது மனைவி கோமளமும் வாசகர்களுடன் உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சுரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த கால அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டார் சாருஹாசன்..!
Comments are closed.