நாசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

176

கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக என  கடந்த 3௦ ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நாசர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்பவர். 1985ல் ‘கல்யாண அகதிகள்’ படம் மூலமாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.

அடுத்து வெளியான ‘நாயகன்’ மூலம் தமிழ்சினிமாவில் நாசரின் இடத்தை நிரந்தரமாக்கினார் மணிரத்னம்.  தொடர்ந்து வந்த நாட்களில் ரஜினியின் குட்புக்கில் இடம்பிடித்த நாசர், அடுத்து கமல் நடிக்கும் படங்களில் மட்டுமல்ல, அவரது மனதிலும் கெட்டியான ஓர் இடத்தை பிடித்துக்கொண்டார்.

அவர் தமிழ் சினிமா மீது கொண்டுள்ள அக்கறையை அவர் தயாரித்த, இயக்கிய ‘அவதாரம்’, ‘தேவதை’ ஆகிய திரைப்படங்களின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இன்றும் தனது கலையுலக பயணத்தை சீர்கா தொடர்ந்து வரும் நாசருக்கு, வரலாற்றில் அவரது பெயரை நிலைநிறுத்தும் விதமாக அவர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ வெளியாக இருக்கிறது. இன்று பிறந்தநாள் காணும் நாசருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.