ஹேப்பி பர்த்டே வரலட்சுமி..!

191

இன்று நடிகர்களின் வாரிசுகள் நடிக்கவருவது என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. ஆனால் வந்தபின் சினிமாவில் நிலைத்து நிற்பது அவரவர் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தை பொறுத்தது அந்த வகையில் சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு நடிப்பும், அழகுடன் கூடிய திறமை இருந்தும்கூட, இப்போதுதான் அதிர்ஷ்டம் கைகூடிவர ஆரம்பித்திருக்கிறது.

அதன் எதிரொலியாகத்தான் தற்போது பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார் வரலட்சுமி.. தனது கேரியரை இன்னும் ஒருபடி மேலே உயர்த்திக்கொள்ள, சினிமா நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள, நடித்தது போக மீதி நேரங்களில் கூடுதலாக இயக்குனர் பாலாவிடம் அசிஸ்டன்ட் டைரக்டர் வேலையையும் பார்த்து வருகிறார்.

இதுவும் தவிர கடந்தவருடம் கன்னடத்தில் ‘மாணிக்யா’ என்ற படத்தில் ‘நான் ஈ’ புகழ் சுதீப் ஜோடியாக நடித்து கன்னட திரையுலகிலும் காலடி எடுத்துவைத்திருக்கிறார் வரலட்சுமி. ஆக இனிவரும் காலம் வரலட்சுமியின் காலம் என்பது உறுதி.. இன்று பிறந்தநாள் காணும் வரலட்சுமிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

பின் குறிப்பு : இவரது பிறந்தநாள் இன்றுதான் என்றாலும் ‘தாரை தப்பட்டை’ படக்குழுவினர் கொஞ்சம் அட்வான்ஸாக, மார்ச்-1ஆம் தேதியே தங்களது ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடிவிட்டார்களாம்.

Comments are closed.