ஸ்ரீப்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

192

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரீப்ரியா. அதையடுத்து ‘நீயா’ படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரீப்ரியா, சிவாஜி, ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். அதுமட்டுமல்ல 1980களில் ரொம்பவே ஸ்டைலிஷான, ஸ்மார்ட் ஹீரோயினாக திகழ்ந்தவர்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே நடிகையான ஸ்ரீப்ரியா, கடந்த 40 ஆண்டுகளாக கலைத்துறையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் உலா வருகிறார். இதுவரை 3 படங்களையும் இயக்கியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரீப்ரியாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.