கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் ‘கயல்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்…!

274

 

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் தனது படம் வெளியாகவேண்டும் என்பதுபோல, நேர்த்தியான படைப்புக்காக வைராக்கியத்துடன் அதிக அவகாசம் எடுத்துக்கொள்பவர் இயக்குனர் பிரபு சாலமன். ‘மைனா’, ‘கும்கி’ என அவரது முந்தைய படங்களில் இதை நாம் பார்த்திருந்தோம்..

இதோ இப்போது அவரது அடுத்த படைப்பான ‘கயல்’, வரும் டிச-25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீசாக தயாராகியுள்ளது. சந்திரன், ஆனந்தி என புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு  ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

சுனாமி பேரலையின் கோர தாண்டவம் (26.12.2004) நிகழ்ந்து பத்து வருடங்கள் முடியும் நிலையில், அதன் பாதிப்பை உள்ளடக்கிய படமாக ‘கயல்’ வெளியாவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்துடன் ஆர்யாவின் ‘மீகாமன்’, விக்ரம் பிரபுவின் ‘வெள்ளக்கார துரை’ என மேலும் இரண்டு படங்களும் போட்டிக்கு களத்தில் குதிக்கின்றன.

Comments are closed.