
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த அவர் வயதுள்ள சமகால நடிகர்களாகட்டும்… அல்லது அவரைவிட பத்து வயது குறைந்தவர்களாகட்டும்… இன்றைய தேதிகளில் அவர்களுக்கு மேக்கப் போட்டாலும் எண்பது, தொண்ணூறுகளில் இருந்த அவர்களது உருவத்தை மீட்டுக்கொண்டுவருவது என்பது கல்லில் நார் உரிக்கிற மாதிரித்தான்.
ஆனால் ரஜினி ஒருவருக்குத்தான் மேக்கப் போட்டால் மீண்டும் இளமை திரும்பும் வரத்தை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். கோடிகளில் ஒருவருக்குத்தான் இந்த வரம் கிடைக்கும். அந்த அற்புத மாயாஜாலத்தை இன்று வெளியாகியுள்ள ‘லிங்கா’வில் கண்குளிர நாம் கண்டுகளிக்கலாம். இன்று பிறந்தநாள் காணும் நமது சூப்பர்ஸ்டாருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.