மறைந்தது ஒரு மாணிக்கம்…!

255


இன்று காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாலுமகேந்திரா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ஒரு ஒளிப்பதிவாளராக, கதாசிரியராக, தலைசிறந்த இயக்குனராக தமிழ்சினிமாவில் தனது அரிய பங்களிப்புகளை விட்டுச் சென்றிருக்கும் பாலுமகேந்திராவிற்கு வயது 75.

இலங்கையில் பிறந்து தமிழகத்தில் தடம் பதித்த அந்த மாமனிதரின் படைப்புகளை பார்த்து தேசியவிருதே தேடி வந்தது. எண்ணிக்கையில் குறைவான படைப்புகள் என்றாலும் அவை அத்தனையும் காலத்தால் ‘அழியாத கோலங்கள்’.

இந்த தள்ளாத வயதிலும் கூட தலைமுறைகள்’ என்ற படத்தை இயக்கி அதில் ஒரு கதாபாத்திரமாகவும் வாழ்ந்திருந்தார் பாலுமகேந்திரா. இன்றைய இளம் ஒளிப்பதிவாளர்களும் வளரும் இயக்குனர்களும் கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு புத்த்கம் தான் பாலுமகேந்திரா.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்..

Leave A Reply

Your email address will not be published.