இந்திய சினிமாவின் தேசிய விருது வழங்கும் விழா 61வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. 2013ல் வெளியான படங்களுக்கான தேசியவிருது வழங்கும் இந்த விழாவில் பங்கேற்கும் தங்களது படைப்புகளை அனுப்பி வைப்பதற்கான தேதியும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ள முடியும். இந்த விழாவில் முப்பது பிரிவுகளில் சிறந்தவற்றிற்கான விருதுகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன. அதேபோல திரைப்படங்கள் அல்லாத, அதாவது குறும்படங்கள், கலைப்படங்கள் ஆகியவற்றுக்கு 22 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதுமட்டுமின்றி சினிமாவைப் பற்றிய சிறந்த புத்தகத்திற்கான விருதும் சிறந்த விமர்சன விருதும் இந்த விழாவில் வழங்கப்பட இருக்கின்றன. படைப்புகளை அனுப்புவதற்கு பிப்ரவரி-14ஆம் தேதி தான் கடைசி நாளாகும்.