மார்ச் முதல் வாரத்தில் ‘அரிமா நம்பி’ இசைவெளியீடு

162

‘கும்கி’ படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த விக்ரம் பிரபு, தனது முதல் படத்திலேயே, திரையுலகின் டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். கடந்தமாதம் வெளியான ‘இவன் வேற மாதிரி’ படமும் அவருக்கு வெற்றிகரமான படமாகவே அமைந்துவிட்டது.

தற்போது விக்ரம் பிரபு ஒரே சமயத்தில் ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’ உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரிமா நம்பி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இப்படத்தின் திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக, தனது குருவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மெருகேற்றியுள்ளார். ட்ரம்ஸ் சிவமணி முதன்முறையாக இசையமைத்து வரும் இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை மார்ச் மாதல் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

Leave A Reply

Your email address will not be published.