விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தற்போது ‘யான்’ படத்தை தயாரித்து வருகிறார். ஜீவா, துளசி நடிக்கும் இந்தப்படத்தை ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குகிறார். இது ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் ‘யாமிருக்க பயமே’ என்ற இன்னொரு படத்தையும் ஆரம்பித்துவிட்டார் எல்ரெட்குமார். நன்றாக கவனியுங்கள். படத்தின் பெயர் ‘யாமிருக்க பயமேன்’ இல்லை.. ‘யாமிருக்க பயமே’ மட்டுமே.
கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த டீகே என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். ‘பயம்’ என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் தான் ‘யாமிருக்க பயமே’.
கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த வருடம் வெளிவர இருக்கும் படங்களில் இது மிக முக்கிய படமாக இருக்கும் என்கிறார் எல்ரெட் குமார்.