ஊட்டியில் முகாமிட்ட ‘நரகாசூரன்’..!

221

naragasooran starts

Related Posts

யாரிடமும் உதவியாளராக இல்லாமல் ஏகலைவன் போல சினிமா கற்றுக்கொண்டு ‘துருவங்கள் பதினாறு’ படத்தின்’ மூலம் நம்பிக்கை தரும் ஒரு இயக்குனராக தன்னை அடையாளப்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான நரகாசூரன்’ படத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஊட்டியில் பூஜையுடன் துவங்கியது. இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் மற்றும் மலையாள நடிகரும் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளில் உருவாகிறது.

Comments are closed.