சிலை கடத்தல் பின்னணியை அலசும் ‘களவு தொழிற்சாலை’..!

209

kalavu thozhirsalai

உலகில் போதை மருத்து கடத்தல் மற்றும் வைரம் கடத்தலுக்கு அடுத்தபடியாக பணம் புரளும் தொழிலாக கருதப்படும் சிலைகடத்தல் தொழிலில் ஒரு ஆண்டு வருமானம் நாற்பது ஆயிரம் கோடிகள் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில் சிலை கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் களவு தொழிற்சாலை’.

இது சர்வதேச சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் செய்த சிலை கடத்தல்களை பற்றியதா அல்லது, தமிழ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய தீனதயாளன் என்ற சிலை கடத்தல் நபரை பற்றியதா, அல்லது சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்த சிலை கடத்தல் பிரிவை 1 சேர்ந்த காவல் துறை அதிகாரியின் கதையா என்றும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

சிலை கடத்தல் பின்னணியில் உருவான முதல் படம் இது என்பதால் இது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது என்கிற இயக்குனர் டி.கிருஷ்ணசாமி படம் குறித்த விபரங்களை பகிர்ந்துகொண்டார்.
.
இந்த கதைக்களம் இந்திய சினிமாவுக்கு புதியது என்பதால் இதை படமாக்குவதில் எனக்கும் சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக ஒரு நெகட்டிவ் கதை களத்தில் படத்தில் விறு விறுப்பான காட்சிகளும், பல அதிரடி திருப்பங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

களவு தொழிற்சாலை திரைப்படத்தில் பல எதிர்மறை பாத்திரங்களாக இருந்தாலும் செயல்பாட்டில் ஒரு பாஸிட்டிவ் தன்மை இருக்கும். இது பரபரப்பான திரைக்கதை யுக்தியில் இருந்து மாறுபட்டு இருக்கும், வயலன்சை விரும்பாத சர்வதேச கடத்தல்காரன், அவனுக்கு துணை போகும் அப்பாவி திருடன், அவனை நேசித்தாலும் அவன் செயலை கண்டிக்கும் காதலி, திரைக்கதையில் அதிரடியாக நுழையும் ஒரு இஸ்லாமிய காவல்துறை அதிகாரி என்று இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சர்வதேச நிழல் உலக மனிதனின் மர்மம் நிறைந்த பயணத்தை கதைகளமாக எடுத்துக்கொண்டு, அதில் சஸ்பென்ஸ்…காதல் … மற்றும் விறு விறுப்பு கலந்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்புதான் கதிர், வம்சிகிருஷ்ணா, இயக்குனர் மு.களஞ்சியம், ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம்..இந்த திரைப்படம் இந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகிறது.

Comments are closed.