தீபாவளி அன்று வெளியான, ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் ‘க்ரிஷ்-3’, 500கோடி ரூபாய் வசூலைத்தாண்டிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன், ப்ரியங்கா சோப்ரா, விவேக் ஒபராய், கங்கனா ராவத் மற்றும் பலர் நடிக்க ராகேஷ் ரோஷன் தயாரித்து, இயக்கியிருந்தார்.
‘க்ரிஷ்’ பட வரிசையில் வெளிவரும் மூன்றாம் பாகம் என்பதால் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கேற்ற மாதிரி தற்போது படமும் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலை வாரிக்குவித்து வருகிறது.