நம்பமுடியாத ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மை அதுதான். நடிக்கவும் நடனம் ஆடவும் தெரிந்த மிகச்சில நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை ஷோபனா. இவர் தற்போது மலையாளத்தில் தான் நடித்து வெளியாகியுள்ள ‘திர’ என்ற படத்திற்கு தானே டப்பிங் பேசியுள்ளார்.
இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? கடந்த முப்பது வருடமாக சினிமாவில் இருக்கும் ஷோபனா தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை. இதுவரை இரவல் குரலிலேயே ஷோபனாவின் நடிப்பை கண்டுகளித்த ரசிகர்கள் இந்தப்படத்தில் ஒரிஜினல் குரலுடன் அவர் நடிப்பை கண்டு ரசிக்கலாம்.
ஷோபனா முதலில் தனது குரலில் டப்பிங் பேசத் தயங்கினாலும் படத்தின் இயக்குனர் அவருக்கு அந்தக் கேரக்டரின் தன்மைக்கு ஷோபனா சொந்தக்குரலில் பேசினால்தான் எடுபடும் என்று விளக்க அதன்பின்னரே ஒத்துக்கொண்டாராம். தற்போது படத்தில் அவரது குரலுக்கும் சேர்த்து பாராட்டுக்கள் வரவே சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஷோபனா.