தமிழ்சினிமாவின் தலைசிறந்த நடன இயக்குரான ரகுராம் இன்று மதியம் ஒருமணி அளவில் காலமானார். அவருக்கு வயது 64. கடந்த நாற்பது வருட காலமாக தமிழ்சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றி அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளை ஆடவைத்த பெருமைக்குரியவர் ரகுராம்.
நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் ரஜினி முக்கியமான வேடத்தில் நடித்த ஒரே வங்காள மொழிப்படமான ‘பாக்யா தேவதா’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார் ரகுராம். ரகுராமின் மனைவி கிரிஜாவும் நடன இயக்குனர் தான். இவரது மகள் காயத்ரி ரகுராம் சில படங்களில் கதநாயகியாக நடித்ததோடு தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
ராகுராம் மாஸ்டரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்.