தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை என இரண்டே இரண்டு படங்கள்தான் இயக்கியுள்ளார் சீனுராமசாமி. ஆனால் இருபது படங்களை இயக்கியவர்போல ரசிகர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டார். தேசியவிருது பெற்ற இயக்குனரான இவர் தற்போது தனது மூன்றாவது படமாக ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இவரது முந்தைய படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இந்தப்படத்திற்கு இசையமைக்கவில்லை. ஆனால் இந்தமுறை அவர் கைகோர்த்திருப்பது யுவன் சங்கர் ராஜாவுடன். அவரின் தீவிர ரசிகரான சீனு ராமசாமி, ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் கதையைச்சொன்னதும் மறுபேச்சு இல்லாமல் ஒத்துக்கொண்டாராம் யுவன். ஆனால் இந்தப்படத்தை தயாரிக்கும் லிங்குசாமியும் யுவனும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் என்பதால் இந்தப்படத்திற்கு யுவன் இசையமைக்க சம்மதித்தார் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் அதில் கொஞ்சம்கூட உண்மை இல்லை என்கிறார் சீனு ராமசாமி.