கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானம், பவர்ஸ்டாருடன் கூட்டணி சேர்ந்து படத்தின் ஹீரோவாக நடித்த சேது இப்போது மீண்டும் சந்தானத்துடன் இணைந்து ‘வாலிப ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சேது. அதே படத்தில் இவருடன் ஜோடி போட்ட விஷாகாவும் இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத்தும் நடிக்கிறார்கள். சாய்கோகுல் ராம்நாத் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் வசதியான சிட்டி பையனாக நடிக்கும் சேது, இதற்காக தனது உடல் எடையைக் குறைத்து ஹேர்ஸ்டைலையும் மாற்றியிருக்கிறார். ‘டாக்டர் ராஜா’ என்கிற சைக்யாட்ரிஸ்ட்டாக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் சந்தானம். சேது, சந்தானம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்களாம்.
கதைப்படி காதலிக்க துவங்கும் சேதுவுக்கு பலவிதமான பிரச்சனைகள் வருகின்றன. இதனால் இதற்கு உதவி தேடி சைக்யாட்ரிஸ்ட்டான சந்தானத்திடம் போகிறார் சேது. கல்யாணமாகாத சந்தானமோ ஏற்கனவே ஹீரோயின்கள் இரண்டு பேருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருபவர். இவர்களுடன் சேர்த்து சேதுவுக்கும் சில ஐடியாக்களை கொடுக்க, அவையெல்லாம் காமெடி கலாட்டாவாக முடிகின்றதாம். இந்தப்படத்தின் மூலம் சந்தானமும் சேதுவும் இரண்டு லட்டு தின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.