சந்தானம் இல்லாமல் நடந்த ‘வாலிபராஜா’ இசைவெளியீட்டு விழா..!

212

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த சந்தானம், சேது,  விசாகா மற்றும் பவர்ஸ்டார் என அதே கூட்டணி  இப்போது மீண்டும் ‘வாலிப ராஜா’ என்ற படத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறது. படத்தில் இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத் நடிக்கிறார்.

கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த சாய் கோகுல் ராம்நாத் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ரதன். இந்தப்படத்தில் சந்தானம் முக்கியமான கேரக்டரில் டாக்டர் ராஜா என்கிற சைக்யாட்ரிஸ்ட்டாக நடிக்கிறார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று தேவி தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் முக்கிய சிறப்பு விருந்தினர்களாக கமலும் இயக்குனர் கே.வி.ஆனந்தும் கலந்துகொண்டனர். ஆனால் படத்தின் இரண்டாவது கதாநாயகனான சந்தானம் மட்டும் இந்த விழாவில் மிஸ்ஸிங்.

உடனே சந்தானத்தை தவறாக நினைத்து விடாதீர்கள். அதற்கு காரணம் ஆந்திராவில் நடைபெற்று வரும் ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்தானம் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தன்னால் ரஜினி படத்தின் படப்பிடிப்பு தடைபட விரும்பாத சந்தானம் தான், தன்னை எதிர்பார்க்காமல் விழாவை குறித்த நாளில் நடத்தி விடுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

படத்தின் தயாரிப்பாளரான எச்.முரளி ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர். அதனால் அவரை வாழ்த்தி ஊக்கப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், கே.ராஜன், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா  உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.

Comments are closed.