
சீனியர் நடிகர்களில் ராதாரவியும் ஒய்.ஜி.மகேந்திரனும் மட்டும் தான் இப்போதும் கூட ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிகப்படங்களில் நடித்து வருகிறார்கள்.. அந்தவகையில் ஒய்.ஜி.மகேந்திரன் தற்போது விஜய்யுடன் ‘பைரவா’, சிம்புவுடன் “ஏஏஏ’ மற்றும் ஆர்யாவுடன் ‘கடம்பன்’ உட்பட சில படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்..
‘பைரவா’ படத்தில் பேங்க் ஆபீசராக நடித்திருக்கிறாராம் ஒய்.ஜி.மகேந்திரன்.. கிராமத்து விஜய், நகரத்து விஜய் என இரண்டு விஜய்களில் நகரத்து விஜய்க்கு ஆதரவாக நின்று, அவரை வில்லன்களுக்கு எதிராக பொங்கி எழ தூண்டிவிடும் கேரக்டராம் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு..
ஒய்.ஜி.மகேந்திரன் மகள் திருமண விஷேசத்தில் விஜய் ஆடிப்பாடுவது போல ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தின் கதை விவாதத்தின்போது இயக்குனர் பரதனிடம் இந்த கேரக்டருக்கு ஒய்.ஜி.சார் தான் செட்டாவர் என விஜய்யே அவரை ஒப்பந்தம் பண்ண சொன்னாராம்.
Comments are closed.