கலைப்புலி தாணுவின் கையில் ‘என்னமோ ஏதோ’..!

100


தற்போது கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘என்னமோ ஏதோ’. ‘கடல்’ படத்தை அடுத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் என்பதால் இந்தப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதால் இந்தப்படத்தில் நிச்சயம் என்னமோ ஏதோ இருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது.

தவிர இந்தப்படம் தெலுங்கில் ஹிட்டான “அலா மொதலயிந்தி” என்ற படத்தின் ரீமேக் என்பதும் கூடுதல் பலம். இதில் ராகுல் ப்ரீத்திசிங், நிகிஷா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். இருவருமே தமிழுக்கு புதிது என்றாலும் தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஆனவர்கள்.

ரவி தியாகராஜன் டைரக்ட் செய்துள்ள இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.