எக்ஸ்-மென் பட வரிசையில் அடுத்த அதிரடி..! மே-23ல் ரிலீஸ்

146

உலக அதிசயங்கள் ஏழு எப்படி பிரசித்தி பெற்று உள்ளதோ, அதை போலவே X -men வரிசை படங்கள் ஒவ்வொன்றுமே உலக அதிசயம் தான். கடந்த வருடங்களில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற x -மென் wolverine மற்றும் x -மென் first class ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றி நாம் அறிந்ததே.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது உலகெங்கும் ஏராளமான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கும் படம் தான் X -மென் days of future past. மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட கற்பனை வளத்துக்கும், இதுவரை கண்டிராத தொழில் நுட்ப அதிசயங்களின் கலவையின் அடுத்த கட்டம் தான் X -மென் days of the future past.

சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்று என்றுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்தப்படத்தில் ஹக் ஜாக்மன் ஏழாவது முறையாக நீண்ட கொடிய நகங்களுடனும், பண்டை காலத்து மனிதனை நினைவுபடுத்தும் சிகை அலங்காரத்துடன் நடிக்கிறார். வரும் மே-23 ஆம் தேதி உலகெங்கும் ஒரே நேரத்தில் இந்தப்படம் வெளியிடப்படுகிறது..

Comments are closed.