
அதிர்ஷ்டக்காற்று தன் பக்கம் வீசும்போதே அதை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்த நடிகை என்பதற்கு லட்சுமி மேனனைத்தவிர வேறு சிறந்த உதாரணம் சொல்லமுடியுமோ? லிப்லாக் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினாலும் குடும்பப்பாங்கான நடிப்பு என்ற தன் கொள்கையில் இருந்து இறங்கிவரவும் இல்லை. இந்த பாலிசி தான் அவருடைய கால்ஷிட் டைரியை எப்போதும் ஃபுல்லாகவே வைத்திருக்கிறது.
‘பீட்சா’ படத்திற்குப் பிறகு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக, இயக்குனர் சற்குணம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் மஞ்சப்பை படத்தில் விமலுக்கு ஜோடியாக, மேலும் கௌதம் கார்த்திக்குடன் சிப்பாய்’ என மொத்தம் அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்.
இன்று பிறந்தநாள் காணும் லட்சுமி மேனனுக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
Comments are closed.