விக்ரமின் அடுத்த படம் யாருக்கு?

264

விக்ரமை பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்து முடிக்கும் வரை அடுத்த படத்தில் கமிட்டாகவே மாட்டார். காரணம் தனது படங்களில் உடல் எடையை கூட்டி, குறைத்து வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதால் அந்த ஒரு படத்தில் மட்டுமே அவரது கவனம் இருக்கும். தற்போது ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ படத்தில் நடித்துவரும் விக்ரமுக்கு வரும் டிசம்பருக்குள் இந்தப்படம் சம்பந்தமான வேலைகள் முடிகின்றன.

அதன்பிறகு யாருடைய படத்தில் நடிக்கிறார் என்பது பற்றி அவர் இன்னும் வாய் திறக்கவில்லை. ஒரு பக்கம் கௌதம் மேனன் டைரக்ஷனில் நடிப்பர் என சொல்லப்பட்டு வந்தது. அவரோ தற்போதுதான் சிம்பு நடிக்கும் படத்தை துவங்கி இருக்கிறார். அதனால் விக்ரமின் அடுத்த படம் டைரக்டர் தரணிக்குத்தான் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

பாலா இயக்கிய ‘சேது’ படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரச்செய்தவர் இயக்குனர் தரணி என்பது மறுக்க முடியாத உண்மை.

இவர்கள் இருவரும் இணைந்த ‘தில்’, ‘தூள்’ படங்களின் வெற்றியை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா? மேலும் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்களும் கூட. இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தும்கூட இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். இப்போது தரணியும் விக்ரமும் அடுத்த ஆண்டில் கை கோர்க்கப் போகிறார்கள் என்றே தெரிகிறது. படத்திற்கு ‘ராஸ்கல்’ என்றும் அதிரடியாக பெயர் வைத்திருக்கிறார்கள். அப்படி இணைந்தால் தரணி-விக்ரம் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை நிச்சயம் ருசிக்கும் என நம்பலாம்.

3 Comments
  1. จำนำรถ says

    666265 185811I always was interested in this subject and still am, regards for posting . 465194

  2. INFY 20K says

    571980 28474The the next time I just read a blog, I really hope that this doesnt disappoint me approximately brussels. Get real, Yes, it was my option to read, but I actually thought youd have some thing intriguing to say. All I hear is typically a couple of whining about something which you could fix when you werent too busy searching for attention. 429182

  3. seleman dinxperlo says

    319137 352808I was reading by means of some of your content material on this internet site and I believe this internet site is truly instructive! Keep putting up. 434419

Leave A Reply

Your email address will not be published.