யார் இந்த ‘வீரன் முத்துராக்கு’..?

115

பல வருடங்களுக்கு முன்பு கிராங்களில் வாழ்ந்த மக்களுக்காக குரல் கொடுத்த நிஜ ஹீரோக்களின் வாழ்க்கை வரலாற்றை அவ்வப்போது சிலர் படமாக எடுப்பார்கள்.. அந்தவகையில் ‘மலையூர் மம்பட்டியான்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ போன்ற வட்டார மக்களிடம் பேரும், புகழும் பெற்ற நிஜ ஹீரோக்களின் வரிசையில் ஒருவன் தான் ‘வீரன் முத்துராக்கு’.

சிவகங்கை மாவட்டத்தில் ஆவாரங்காடு பகுதியில் வாழ்ந்த, சிலம்பாட்ட கலையில் வல்லவனான ஒருவனின் கதையை அடிப்படையாக வைத்து காதல் மற்றும் ஆக்‌ஷன் படமாக உருவாக்கி இருக்கிறது ‘வீரன் முத்துராக்கு’ எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர்தான் இந்தப்படத்தின் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் லியாஸ்ரீ.

கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் சி.ராஜசேகர் “அச்சன்குளம் – ஆலங்குளம் என்ற இரண்டு கிராமத்து மக்களிடையே உள்ள ஆக்ரோஷமான கோபம் எப்படிப்பட்டது என்பது தான் இந்த ‘வீரன்முத்துராக்கு’ இது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் விருந்து” என்கிறார் இயக்குனர் சி.ராஜசேகர்.

Leave A Reply

Your email address will not be published.