‘லியோ படத்தின் முதல் காட்சி எப்போது? – இதோ முழு விவரம்

178

விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக திமுக் அரசை தொடர்பு படுத்தி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

குறிப்பாக, சீமான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விஜய் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்புக்கு திமுக் அரசு தான் காரணம், விஜயை முடக்கவே அவர்கள் இதை செய்கிறார்கள், என்றெல்லாம் குற்றம் சாட்டினார்கள்.

இந்த நிலையில், நேற்று இரவு லியோ படக்குழுவினருடன் இணைந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘லியோ’ படம் பார்த்ததோடு, நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, லியோ படத்திற்கும் திமுக அரசையும் தொடர்பு படுத்தி எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை லியோ படத்தின் காலை 7 மணி காட்சி இருக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆம், லியோ படத்தின் காலை 7 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. காலை 9 மணிக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.