வாக்காளர்களை எச்சரிக்கிறார் கவுண்டமணி

72

தேர்தலில் போட்டியிடும் எந்த வாக்களர்களுக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள் அதற்காக அவர்கள் ஓட்டுப்போடும் கடமையை செய்யாமல் இருக்கமுடியாது அல்லவா? அதனால் அதை வெளிப்படுத்தும் விதமாக பயன்படும் ஓட்டுச்சாவடியில் பயன்படும் ஒரு படிவம் தான் 49ஓ.

இந்த 49-ஒ பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் அவ்வளவாக சென்றடையவில்லை என்பதே உண்மை. ஆனால் இதை மக்களிடம் கொண்டுசேர்க்க நம் எல்லோருக்கும் தெரிந்த திரையுலக பிரபலம் ஒருவர் களம் இறங்கிவிட்டார். அவர் வேறு யாருமல்ல. நம்ம கவுண்டமணியே தான்.

உண்மைதான். ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்திருக்கும் கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தின் பெயர் தான் 49-ஒ. நம்புங்கள்.. 74 வயதாகும் கவுண்டமணிதான் இந்தப்படத்தின் கதாநாயகனும் கூட. ஜீரோ ரூல்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை பி.ஆரோக்கியதாஸ் என்பவர் இயக்குகிறார்.

எந்த ஒரு விஷயத்தையும் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பொறுத்து அது மக்களிடம் எளிதில் சென்றடையும். நிச்சயம் இந்தப்படத்தின் மூலமாக 49-ஒ பிரபலமாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை. கவுண்டமணியின் வெற்றிக்கொடி மீண்டும் உயரே பறக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்தும் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.