விவேக் பட இசைவெளியீட்டு விழாவில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்

102

ஆர்.கண்ணன் என்பவர் இயக்கிவரும் ‘நான்தான் பாலா’ என்ற படத்தில் முக்கியமான ரோலில் சீரியஸான கதபாத்திரம் ஏற்றிருக்கிறார் விவேக். இந்தப்படம் ஒரு பிராமணருக்கும் ஒரு முரடனுக்கும் உள்ள உறவைப்பற்றிய கதையாம். இதில் பிரமாணர் கேரக்டரில் தான் நடிக்கிறார் விவேக்.

Related Posts

இந்த படத்தை இயக்கும் கண்ணன் ஜெயம்கொண்டான், சேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அல்ல.. இவர் 18 வருடங்களுக்கு முன்பே பிரபுதேவா நடித்த ராசையா படத்தை இயக்கியவர். மேலும் பாலாவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். இருவரின் பெயருமே ஆர். கண்ணன் என்பதால் பெயர்க்குழப்பம் அடிக்கடி ஏற்படுகிறதாம்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாராதிராஜா ஆகியோருடன் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.