தமிழகம் முழுதும் பரபரப்பை கிளப்பிய நிகழ்வுதான் நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் வைத்து சுவாதி என்கிற பெண் கொலைசெய்யப்பட்டது. இந்த சம்பவத்தை சுவாதி கொலை வழக்கு என்கிற பெயரில் படமாக்கினார் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன்.. ஆனால் தற்போது சில காரணங்களால் இந்தப்படம் ‘நுங்கம்பாக்கம்’ என டைட்டில் மாற்றப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா, மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஏ.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடித்திருக்கிறார்கள்.
நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், “இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன். ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்கள் ஏன் பயப்படனும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.
என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப் பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம்” என்றார்
இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் பேசும்போது, “ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது. ஜெயிலுக்கு மட்டும் தான் போகல..அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்.. எனக்கு வேற வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக்கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும்” என்றார்.

Comments are closed.