மலையாள ரசிகர்களிடையே உயர்ந்த விக்ரமின் ‘இமேஜ்’..!

189

vikram fan in kerala 1
நம் தமிழ் நடிகர்களில் விக்ரமை பொறுத்தவரை மலையாள ரசிகர்களுக்கு தனி பாசம் உண்டு.. காரணம் சேது படத்தின் மூலம் அவர் மாஸ் ஹீரோவாக மாறும் வரை அவரை அரவணைத்து வாழ வைத்தது மலையாள திரியுலகம் தான். அதனால் தான் சமீபத்தில் நடைபெற்ற ஆசியாநெட் சினிமா விருது வழங்கும் விழாவிற்கு அழைப்பு வந்தபோது மறுக்காமல் விழாவில் கலந்துகொண்டார்..

அந்த விழாவில் இருக்கையில் அமர்ந்திருந்த விக்ரமை மலையாள ரசிகர் ஒருவர் ஆர்வம் மிகுதியால் கட்டிப்பிடித்துள்ளார்.. விக்ரம் அதை பெருந்தன்மையாக அங்கீகரித்தாலும், அருகில் இருந்த செக்யூரிட்டியும், விழா அமைப்பாளர் ஒருவரும் அந்த இளைஞனின் சட்டையை பிடித்து அந்தப்பக்கமாக தள்ளினர்..

இதை எதிர்பாராத அந்த இளைஞர் அவமானத்தால் அதிர்ச்சியுற்றார். அதைவிட இவர்களின் செயலால் அதிர்ச்சியுற்ற விக்ரம் செக்யூரிட்டியை கண்டித்ததுடன் அந்த இளைஞரை மீண்டும் தன்னருகில் அழைத்து, அந்த இளைஞன் மறுக்க மறுக்க, அவனுடன் விடாப்படியாக சேர்ந்து நின்று செல்பியும் எடுத்துக்கொண்டார்..

தனது மனக்காயத்துக்கு உடனடி நிவாரணம் பெற்ற அந்த ரசிகர் மட்டுமல்ல, விக்ரம் அருகில் அமர்ந்திருந்த சில பெண் வி.ஐ.பிகளும் தங்கள் கண்களில் கண்ணீரை துடைத்துக்கொண்ட நெகிழ்ச்சியான தருணத்தை அங்கே பார்க்க முடிந்தது. இதன் மலையாள, மற்றும் தமிழ் ரசிகர்களிடையே மூலம் விக்ரமின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

Comments are closed.