
‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அந்தப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘ஒருநாள் கூத்து’ படம் உருவாகியுள்ளது. இதிலும் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘அமரகாவியம்’ அழகு நாயகியான மியா ஜார்ஜ் இதில் தினேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘மெட்ராஸ்’ ரித்விகாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான நெல்சன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
கருணாகரன், பாலசரவணன், முண்டாசுப்பட்டி ராமதாஸ் என மூன்று காமெடி நடிகர்களும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் இந்தப்படத்தை தணிக்கை குழுவினரின் பார்வைக்கு திரையிட்டு காட்டினார்கள்..
படத்தை பார்த்த அதிகாரிகள் படம் நன்றாக இருந்தாலும் ‘U/A’ சான்றிதழ் தான் தரமுடியும் என கூறிவிட்டார்கள்.. அதனால் படத்தில் சென்சார் அதிகாரிகள் குறிப்பிட்ட சில காட்சிகளை வெட்டியும் காட்சிகளில் திருத்தம் செய்தும் மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர் படக்குழுவினர். இந்தமுறை படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Comments are closed.