
விமலுக்கு ஒரு ராசி இருக்கிறது. அது என்னவென்றால் அவர் நடிக்கும் படங்கள் ரிலீசானால் தொடர்ந்து ரிலீஸாகி கொண்டே இருக்கும்.. இல்லையென்றால் படங்களே இல்லாத நிலை போன்ற தோற்றம் உருவாகும்.. அவரது பலவீனமும் கூட அதுதான்.. ஒருவழியாக கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் நடித்த ‘அஞ்சல’ படத்தை ரிலீஸ் செய்தார்கள்..
ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.. ஆனாலும் விமல் முழு மூச்சாக நம்பியிருக்கும் ‘மாப்ள சிங்கம்’ படத்திற்கு இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.. அதனால் படத்தை வரும் மார்ச்-11ஆம் தேதி வெளியிடும் வேலைகளில் தயாரிப்பாளர் மும்முரமாக ஈடுபட்டுள்ளாராம்.
ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார்.. சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் விமலுடன் இணைந்து அஞ்சலியும் நடித்துள்ளார்.. ஆக விமலை அந்த அஞ்சல கைவிட்டாலும் இந்த அஞ்சலி கைவிடமாட்டார் என படக்குழுவினர் நம்புகின்றனர்..
Comments are closed.