விஜய்சேதுபதி படத்துக்கு தேவைப்பட்ட 30 இடங்கள்…!

201

96

விஜய்சேதுபதி-த்ரிஷா இணைந்து நடிக்கும் படம் தான் ‘96’. இந்த படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில் விஜய்சேதுபதி சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட உள்ளது. இதுவரை விஜய்சேதுதுபதி நடித்து வெளிவந்த படங்களின் படப்பிடிப்பு இவ்வளவு வேறுபட்ட இடங்களில் நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் அவ்வளவு லொக்கேஷன்கள் இடம் பெற்றுள்ளன.

இது ஒரு டிராவலிங் சம்மந்தப் பட்ட கதை என்பதால் இவ்வளவு லொகேஷன்கள் தேவைப்படுகிறது என்றார் இயக்குனர் பிரேம்குமார்.

Comments are closed.