“யூடியூப் ஆட்களும் இனி மீசையை முறுக்கலாம்” ; ஹிப் ஹாப் ஆதி..!

247

meesaiya murukku

சுந்தர்.சி தயாரிப்பில் மீசைய முறுக்கு’ என்கிற படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்தும் உள்ளார். நாயகிகள் ஆத்மீகா, மனிஷாஆகியோர் நடித்துள்ளனர்.. ஆதியின் அப்பாவாக முக்கியமான வேடத்தில் விவேக் நடித்துள்ளார்.

“மீசைய முறுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பையோ- கிராபி திரைப்படம் போல் இருக்கும். கொஞ்சம் கற்பனை கதை , நிறைய உண்மை கதை இது தான் மீசைய முறுக்கு திரைப்படம். ஆதி இந்த கதையை என்னிடம் கூறியதும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது” என கூறுகிறார் சுந்தர்.சி.

“.நான் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு தயாரிக்க வேண்டும் சுந்தர்.சி சார் விரும்பினார். ஆனால் எனக்கு என்னுடன் பல ஆண்டுகளாக இனைந்து பயணிக்கும் குழுவோடு நான் இந்த படத்தில் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியவுடன் அதுவும் நன்றாக தான் இருக்கும் என்று உடனே ஒப்புக்கொண்டார் என்னை போல் யூடியூப் மூலம் புகழ் பெற்ற பலர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். குறும்படம் எடுத்து பலர் டீமாக சினிமாவுக்கு வந்தார்களோ அதே போல் இப்போது யூடியூப் மூலம் சென்சேஷன் ஆன நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். எங்களை போல் இன்னும் பலர் வருவார்கள் அதற்க்கு மீசைய முறுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்” என்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

Comments are closed.