‘ஜில்லா’வின் கலெக்ஷன் நூறு கோடியை தொடப்போகிறது என்கிறார்கள்.. இந்த சந்தோஷத்துடன் அடுத்த மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் விஜய். இது ஏற்கனவே மீண்டும் இருவரும் இணைந்து பணிபுரிவது என திட்டமிடப்பட்ட ஒன்றுதான்.
வழக்கமாக விஜய் நடிக்கும் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடியும் தருவாயில்தான் அவரது அடுத்த படத்தைப் பற்றிய தகவல் கசிய ஆரம்பிக்கும்.. ஆனால் அதிசயமாக சில நாட்களுக்கு முன்புதான் விஜய்யின் அடுத்த படத்தை பத்திரிகை–மக்கள் தொடர்பாளரான பி.டி.செல்வகுமார் தயாரிப்பார் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.
இந்த நிலையில் அந்தப்படத்தை ‘ராஜாராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் நண்பன்’ படத்தில் நடிக்கும்போது அதில் உதவி இயக்குனராக இருந்த அட்லியுடன் விஜய்க்கு ஏற்பட்ட நட்புதான் இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி ‘ராஜாராணி’ படமும் சூப்பர்ஹிட்டானதால் விஜய் படத்தை அட்லி இயக்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவே தெரிகிறது.
இதுதவிர சசிகுமார் வேறு விஜய்யிடம் ஒரு கதை சொல்லி அசத்தியுள்ளார். கிட்டத்தட்ட எல்லா விஷயங்களும் பேசி முடிக்கப்பட்டு விட்டன என்றும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவேண்டியதுதான் பாக்கி என்றும் சொல்கிறார்கள். முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அட்லி, அதன்பிறகு சசிகுமார் என விஜய்யின் படங்கள் வரிசை கட்டும் என
எதிர்பார்க்கலாம்.

532534 392215Hi, you used to write outstanding articles, but the last several posts have been kinda boring I miss your tremendous posts. Past few posts are just a little out of track! 423338
ชอบแนวคิดที่แชร์ไว้ในบทความนี้ครับ ถ้าใครกำลังมองหาบริการจัดดอกไม้งานศพ
ผมแนะนำลองดูร้านที่มีผลงานจริงและรีวิวดี ๆ ครับ
my web-site – พวงหรีด วัดเวฬุราชิณ