
வரும் 21ஆம் தேதி, தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி நடித்துள்ள ‘நானும் ரௌடி தான்’ படம் வெளியாக இருக்கிறது.. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக உள்ளே வந்த விதம் பற்றி கூறினார்.
“நான் போடா போடி’ படத்தை இயக்கி ரிலீஸ் செய்த சமயத்தில் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால் கொஞ்சம் டல்லாக இருந்தேன்.. அந்த நேரம் விஜய்சேதுபதி போன் செய்து நான் பீட்சா படத்தின் ஹீரோ என அவராகவே, அறிமுகப்படுத்திக்கொண்டு, அருமையான படம் என பாராட்டினார். துவண்டு போயிருந்த எனக்கு அது உற்சாகம் தந்தது. அதன்பின் நல்ல நண்பர்களாகி விட்டோம்.. அதன்பின்னர்தான் இந்த கதையை விஜய்சேதுபதியிடம் சொன்னேன்” என்றார் விக்னேஷ் சிவன்..
அடுத்து பேசிய விஜய்சேதுபதி, “முதலில் இந்தக்கதையை விக்னேஷ் சொன்னபோது பிப்டி பிப்டி மனநிலையில் தான் இருந்தேன். ஆனால் நாளுக்கு நாள் கதையை மெருகேற்றிய விக்னேஷ், கடைசியாக சொன்ன பைனல் ஸ்கிரிப்ட்டை கேட்டதும் முழு திருப்தி வந்துவிட்டது.. வேறு எந்தெந்த நடிகர்களுக்கெல்லாம் இது செட்டாகும் என நாங்கள் பேசிக்கொண்டிருந்த இந்த கதை கடைசியில் எனக்கே கிடைத்துவிட்டது” என்றார்.
Comments are closed.