தேர்தலுக்கு முன்னரே எஸ்.பி.ஐ சினிமாஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த சரத்குமார்..!

185

நடிகர்சங்க இடத்தில் புதிய கட்டடம் கட்ட எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், அதற்கு பதிலாக நாமே நமக்கு தேவையான கட்டடத்தை கட்டிக்கொள்ளலாம் என்றும் விஷால் தரப்பினர் வலியுறுத்தியதும், அதற்கு சரத்குமார் அணி ஒப்புக்கொள்ளாததும் தான் நடிகர்சங்க தேர்தல் இந்த அளவுக்கு தீவிரமாக காரணமே..

ஆனால் தேர்தலில் விஷால் அணி ஜெயித்த நிலையில் இன்று, சரத்குமார் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லியிருக்கிறார்.. அதாவது கடந்த செப்-29ஆம் தேதியே எஸ்.பி.ஐ சினிமாஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்..

இந்த செய்தியை சரத்குமார் முன்கூட்டியே சொல்லாததற்கு காரணம், சொன்னால் எங்கே எதிரணியினர் தாங்கள் அவர்களது குற்றச்சாட்டுக்கு பயந்து விட்டதாக நினைத்துவிட்டால், அது தனது அணிக்கு பலவீனமாக அமைந்துவிடுமோ என்றுதான் சொல்லாமல் விட்டுவிட்டதாகவும், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை துடைக்கவே இதை செய்ததாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சாதாரணமாக இதுபோன்ற ஒப்பந்தங்களை ரத்து செய்வதை கௌரவ குறைச்சலாக நினைத்து வழக்கு போடும் அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட எஸ்.பி.ஐ சினிமாஸ், சரத்குமார் பக்கம் வீசப்படும் குற்றச்சாட்டுக்களையும், பிரச்சனையின் தீவிரத்தையும் பார்த்து தானாகவே முன்வந்து ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டார்களாம்.

Comments are closed.