வித்தியாச கெட்டப்பில் பூஜையில் கலந்துகொண்ட விஜய்..!

223

vijay 60

நாளை மறுநாள் தனது ‘தெறி’ படம் ரிலீஸாக இருக்கும் வேளையில் சட்டென, தனது 60வது படத்திற்கு சிம்பிளாக பூஜை போட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார் விஜய்.. அடுத்து சித்திரை மாதம் துவங்க இருப்பதால், சென்டிமென்ட்டாக இந்த மாதமே தனது படப்பிடிப்பை துவக்கிவிட்டார் விஜய். அழகிய தமிழ்மகன் படத்தை தொடர்ந்து இந்தப்படத்தில் மீண்டும் விஜய்யை இயக்குகிறார் பரதன்.

விஜயா புரடக்சன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்தப்படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, நகைச்சுவை நடிகராக நடிக்கிறார் சதீஷ்.. இந்தப்படத்துக்கான பூஜையில் விஜய் பட்டு வேட்டி, சட்டையில், தலையில் மொட்டை அடித்து கொஞ்சமாக வளர்ந்தது போன்ற அளவான முடியுடன் கூடிய புது லுக்கில் கலந்துகொண்டது வித்தியாசமாக இருந்தது. அதுமட்டுமல்ல, பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கியதால் படத்தில் விஜய் இதே கெட்டப்புடன் நடிக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

Comments are closed.