
நம் தமிழ் சினிமாவில் மலையாள கதாநாயகிகளை வைத்துதான் வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர்.. அவர்களும் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மாதிரியே நம் தமிழ்சினிமாவுடன் இணைந்துவிட்டனர்.. இந்தநிலையில் அவர்கள் தொடர்ந்து மலையாள படாங்களில் நடிக்கிறார்களோ இல்லையோ, தமிழ்ப்படங்களிலேயே மலையாள கேரக்டர்களாக நடித்தால் எப்படி இருக்கும்..?
நடித்தார்களே.. ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’யில் அசினும், ‘மதயானை கூட்டம்’ படத்தில் ஓவியாவும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து படிக்கும் மலையாளி பெண்களாக நடித்திருந்தனர். இப்போது அடுத்ததாக சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள ‘வெற்றிவேல்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள மியா ஜார்ஜும் கொச்சியை சேர்ந்த பெண்ணாக, இங்கே தமிழ்நாட்டுக்கு வந்து படிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
Comments are closed.