தற்போது ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடித்துவரும் அதர்வா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் ‘ஈட்டி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் நடித்து வெற்றிபெற்ற படத்தின் பெயர்தான் இது.
இந்தப்படத்தை வெற்றிமாறனிடம் ‘ஆடுகளம்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவிபிரகாஷ் என்பவர் இயக்குகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ‘வ.வா.சங்கம்’ புகழ் ஸ்ரீதிவ்யா. ஜனவரியில் இருந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.