வரும் நாட்களில் ‘வெறி’ பிடித்து அலையப்போகும் தருண்கோபி..!

195

‘திமிரு’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தபின் எகிறி அடித்திருக்கவேண்டிய இயக்குனர் தருண்கோபி, சிம்புவை வைத்து இயக்கிய ‘காளை’ படம் காலை வாரியதும், நடிகர் என்கிற முகமூடியை மாட்டிக்கொண்டு தனக்குள் இருந்த இயக்குனரை சில காலம் வீட்டுச்சிறையில் வைத்திருந்தார்..

இப்போது அந்த சிறையிலிருந்து நீண்ட நாட்கள் கழித்து ‘வெறி’யோடு கிளம்பியிருக்கிறது தருண்கோபிக்குள் அடங்கிக்கிடந்த இயக்குனர் என்கிற மிருகம்.. ஆம் தருண்கோபி தற்போது மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ள தருண்கோபி இயக்கும் படத்தின் பெயரும் ‘வெறி’ தான்.. அதுமட்டுமல்ல ‘திமிரு-2’ ஆகவும் இந்தப்படம் உருவாகிறதாம்.

இந்தப்படத்தில் தருண்கோபி ஹீரோவாக நடிக்க, ரமணா இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். காதல் சந்தியா கதாநாயகியாக நடித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டாராம் தருண்கோபி. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. ஆக படம் வெளியாகும்வரை தருண்கோபி ‘வெறி’யோடு தான் இருப்பார் போலும்.

Comments are closed.