வெங்கடேஷும் ரவிதேஜாவும் சேர்ந்தா மாஸுடா..!

232

தமிழில் கடந்த வருடம் வெளியான ‘ஜில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருந்த சரத் மாறாருக்கு, அப்போது வேறு எந்த ஐடியாவும் மனதில் இல்லை. ஆனால் இந்தியில் வெளியான ‘ஓ மை காட்’ படத்தை தெலுங்கில் பவன் கல்யாணையும் வெங்கடேஷையும் வைத்து தயாரித்தபோது தான் புதிய யோசனை மனதில் டாலடித்திருக்கிறது..

ஆக ஜில்லா ரீமேக்கில் மோகன்லால் கேரக்டருக்கு வெங்கடேஷை ஓகே செய்தவர், விஜய் கேரக்டரில் நடிக்க மாஸ் மகாராஜாவான ரவிதேஜாவை உள்ளே கூட்டி வந்தார். பவன் கல்யாணுக்கு ‘ஜில்லா’ ரீமேக்கில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்பதால் தான் இந்த ஏற்பாடு. ஏப்ரலில் துவங்கும் இந்தப்படத்தை டைரக்டர் வீரு போத்லா இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

Comments are closed.