“என்னை விமர்சித்தால்’ – நீது சந்திரா அதிரடி அட்டாக்..!

249

ஆடிக்கு ஒன்று, அம்மாவாசைக்கு ஒன்று என தமிழ்ப்படங்களில் தலைகாட்டினாலும், தான் நடிக்கும் படங்களில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் கவனிப்பார் நீது சந்திரா. அந்தவகையில் தற்போது, ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒன்றல்ல.. இரண்டு.. அதாவது டபுள் ரோலில் நடிக்கிறார் நீது சந்திரா.

சமீபத்தில் நீது சந்திரா டிவிட்டரில் போட்டிருந்த ஸ்டேட்டஸ் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. “என்னுடைய கடின உழைப்பிற்காக, நீங்கள் என்னை பாராட்ட முடியாது என்றால், என்னை விமர்சிக்கவும் உங்கள் யாருக்கும் உரிமையில்லை.. மீறி விமர்சித்தால் நீங்கள் பிளாக் பண்ணப்படுவீர்கள்” என்பதுதான் ட்வீட்டின் சாராம்சம்.. நீதுவின் இந்த அட்டாக்கிற்கு காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை.

Comments are closed.