இவ்வளவு நாட்களாக தள்ளித்தள்ளிப்போன, விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி படம் ஒருவழியாக வரும் டிச-16ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் பேபி ஷாமிலி கதாநாயகியாக நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை தகராறு’ கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்
வீர சிவாஜி படத்தின் கதை என்ன தெரியுமா..? மக்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் பிரபு, வில்லனின் பிரச்சனையில் தெரியாமல் போய் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டு வெளியே வரும் விக்ரம்பிரபு, வில்லனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனையை எப்படி தீர்த்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. இதை பக்கா கமர்ஷியல் படமாக. ஆக்ஷனும், காமெடியும் கலந்து இயக்கியுள்ளாராம் கணேஷ் விநாயக் .
Comments are closed.